2025 மே 07, புதன்கிழமை

வடக்குக் கிழக்கில் இணைப்பின் போர்வையில் எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டன: ஹுனைஸ் பாரூக்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


'மாகாணசபைச் சட்டத்தின் அடிப்படையில் முதலமைச்சர்கள் இருவர்கள் எதையும் நினைக்கின்றபொழுது அந்த இரண்டு மாகாணசபைகளும் ஒரு ஏற்பாட்டை பெரும்பான்மையோடு நிறைவேற்றுகின்றபொழுது அது ஏற்றுக்கொள்ளப்படும். எனவே நிச்சயமாக வடமாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு இந்த கிழக்கும் அவர்களின் கைகளுக்குப் போகவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இதை அவர்கள் நோர்வேக்கும் அமெரிக்காவிற்கும் காட்டவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. எவ்வாறு முஸ்லிம்கள் இழைக்கப்பட்ட அநீதிகள் வெளியுலகத்திற்கு காட்டப்படாமல் மறைக்கப்பட்டதோ அதேபோன்று இந்த இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் இல்லையென்ற செய்தியை அவர்கள் வெளிநாட்டிற்கு காட்டவேண்டிய தேவை இருக்கின்றது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் வடக்குக் கிழக்கில் இணைந்திருந்த போர்வையில் அவைகள் மறுக்கப்பட்டன.'

இவ்வாறு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டம் நேற்று வியாழக்கிழமை கி;ண்ணியா ரஹ்மானிய்ய நகரில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மூதூர் கிண்ணியா போன்ற கிராமங்களில் 30 வருட காலத்தில் நாம் எத்தனை இளைஞர்களையும் சிறுவர்களையும் பறிகொடுத்திருக்கின்றோம். எங்கள் சொத்துக்கள் எவ்வளவோ இழக்கப்பட்டிருக்கின்றன. எங்களுக்கு கிடைக்க வேண்டிய எத்தனை பதவிகள் பறிபோயிருக்கின்றன. நாங்கள் அனுபவிக்க வேண்டிய எத்தனையோ  அனுபவிக்க முடியாத நிலை இருந்தது. யுத்த காலத்தில் நாங்கள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவத்திருக்கின்றோம்.  இந்த யுத்தத்தைக் காரணம் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் எங்களை எவ்வாறு ஆட்டிப்படைத்தார்கள் போன்றவற்றை நாங்கள் இன்னும் மறக்கமுடியாது.

இந்த நிகழ்வுகளை இன்று அடியோடு ஒழித்து நாங்கள் இவ்வாறு இந்த இனிய மாலைப்பொழுதில் இரவு நேரத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் கூடியிருக்கின்றோம் என்றால் இந்த நிம்மதியை இந்த சமாதனத்தை எந்த தலைமைத்துவம் ஏற்படுத்தி தந்தது?
முஸ்லிம்களின் விடிவுக்காக  எங்களது உரிமைக்காக 1987ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மறைந்த மர்ஹும் அஸ்ரப்; உருவாக்கினார். அந்த கட்சி ஏன் உருவாக்கப்பட்டது. எந்த சந்தர்ப்பத்தில் உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சியில் தலைமை தாங்கிய தலைவர் என்ன நோக்கத்திற்காக உருவாக்கினர்கள்.

அந்தக் கட்சியின் பங்காளிகளாக உறுப்பினர்களாக இருந்த அத்தனை போராளிகளும் ஏன் அந்தக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள.; எந்த அபிவிருத்தியையும் எதிர்பார்க்காமல் மரச்சின்னத்தை நோக்கிச் ஏன் சென்றனர்.
தலைவர் அஷ்ரப் அந்தக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டும் கூட எங்கள் தாய்மார்கள் மரச்சின்னத்தை வாக்குச்சீட்டில் தேடிய வரலாறு இருக்கின்றது.

இன்று அந்தக் கட்சியின் போக்கு என்ன நாங்கள் விரிவாக விளங்க வேண்டிய காலகட்டமிது. அன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போது கிழக்கு மாகாணத்தில் இருந்த முஸ்லிம்களின் பெரும்பான்மை இல்லாது ஒழிக்கப்பட்டது. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் வடக்குக் கிழக்கில் இணைந்திருந்த போர்வையில் அவைகள் மறுக்கப்பட்டன.

எனவே எமது உரிமைகளைப் பெற்றெடுப்பதென்றால்  இந்த கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நேர்மையை வென்றெடுப்தென்றால் கிழக்கு மாகாண முஸ்லிம்களும் சமூகத்தில்  தலைநிமிர்ந்து வாழ்வதென்றால் அவருடைய உரிமையை வென்றெடுப்தற்கு  அன்று இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஒரு நல்ல நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டது. என்ன நோக்கத்திற்காக கொண்டு வந்தாரோ இன்றைய நிலைமையில் இக்கட்சி  அது தலை கீழாக இருக்கின்றது.

இன்று அரசாங்கம் இந்த தேர்தலை ஏன் அவசர அவசரமாக நடத்தப்படுகின்றது. இதற்குப் பின்னணியில் இந்த தேர்தலின் முடிவை எதிர்பார்த்து நோர்வையும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஏன் எதிர்பார்க்கின்றது.

இலங்கையில்  9 மாகாணங்கள் இருக்கின்றன. ஏழு மாகாணங்களில் சிங்கள சமூகத்தினர் முதலமைச்சராக இருக்கின்றனர். வடக்கில் ஒரு தமிழ் சகோதரர்தான் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. ஆனால் கிழக்கில் மாத்திரமே ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை அழிப்பதற்கு பல சதிகள் நடக்கின்றன. ஆனால் இந்த சதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்; துணைபோகி;ன்றது என்பது எங்களுக்கு மிக வேதனையாக இருக்கின்றது.

எனவே ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். நாங்கள் அழிக்கின்ற வாக்குகள் தலைவர் அஸ்ரப் என்ன நோக்கத்திற்காக இக்கட்சியை உருவாக்கினாரோ அந்த கனவை நனவாக்கும் வகையில் வாக்களிக்க போகின்றீர்களா அல்லது வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற அமெரிக்க மேற்குலக நாடுகளுக்கு வகை சொல்ல வாக்களிக்க போகின்றீக்களா?'  என்றார்.

இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம பேசுகையில்,

'கிழக்கு மாகாணத்தி;ல் திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி, நிலாவெளி, குச்சவெளி ஆகிய பகுதிகளில் பல சுற்றுலா விடுதிகளை அமைக்கவுள்ளோம். சம்பூர் பகுதியில் தொழில்பேட்டையொன்றை அமைக்கவுள்ளோம.; இதன் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புக்களையும் வழங்கவுள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்கவிடமோ, ரவூப் ஹக்கீமிடமோ, அல்லது சம்பந்தனிடமே அதிகாரம் இருக்குமென்றால் இந்த நாடு மேலும் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கும். இந்த சமாதான நிலை ஏற்பட்டிருக்காது.

வியாபாரம் செய்யமுடியாது, தொழில் செய்ய முடியாது அலுவலகங்களுக்குச் செல்ல முடியாது. மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாது. எங்கு சென்றாலும் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருப்பார்கள். பாடசாலைக்குச் சென்ற பிள்ளை வீடு வருமோ என்று சந்தேகமிருந்தது. நீங்கள் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்புவீர்களோ பெரும் அச்சத்துடன் மனைவியும் பிள்ளைகளும் காத்திருப்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கந்தளாயிலும் மாத்தளையிலும் வந்திருந்தீர்கள், அதே போன்று மன்னாரில் இருந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலயங்களுக்குள் அங்கிருந்து வெளியேற்றியிருந்தார்கள். இந்த முஸ்லிம்கள்  கடந்த 20 வருட காலமாக புத்தளத்தில் இன்றும் கூடாரத்துக்குள் வசித்து வருகின்றார்கள். நாங்கள் செய்த விடயங்களுக்கு முஸ்லிம்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சில அரசியல்வாதிகளால் பேசுவதற்குக்கூட கள அமைத்துத் தந்தது இந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அரசாங்கமும் எங்கள் மஹிந்த ராஜபக்ஷவுமே.

இன்று அபிவிருத்தி செய்வதற்கும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும் சக்தியிருப்பது எங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனிக்கு மட்டும்தான், ஜனாதிபதி எங்களுடையது.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் , கிண்ணியா பகுதிகள் வளம் நிறைந்த பகுதிகள் இந்த கடல் தென் பகுதி வரைக்கும் இந்த கடல்தான் இருக்கின்றது.

நாங்கள் ஒவ்வொரு வரும் மோதிக் கொள்ளாமல் தோளோடு தோள் கொடுத்தால்தான் இந்த சிறிய நாட்டை வளம் பெறச்செய்வதோடு அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும்.
நாங்கள் சனத் ஜெயசூரிய எந்த ஜாதி முரளி எந்த ஜாதி. முபாரக் எந்த ஜாதி பார்ப்பதில்லை அவ்வாறு இல்லை' ஏன்றார்.

இந்நிகழ்வில் வேட்பாளர்கள் நஜீப் ஏ மஜீத், ஆதம்பாவா தௌபீக் உட்பட பலர் உரையாற்றினார்கள் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X