2025 மே 07, புதன்கிழமை

பள்ளிகள் உடைக்கப்பட்டதாக நிரூபித்தால் பதவி விலகுவேன்: அஸ்வர் எம்.பி.

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


'இலங்கையில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலுள்ளவர்களாவது அப்பள்ளி உடைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னால் நான் அனைத்துப் பதவியையும் விட்டு இராஜினாமாச் செய்வேன். இந்தச் சவாலை ஏற்று என்னை எந்தப் பள்ளிக்காவது கூட்டிச் செல்லுங்கள்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று சவால் விடுத்தார்.

கிண்ணியா நகரசபை மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு மாகாண சபை திருகோணமலை மாவட்ட ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களான நஜீப்- மஜீத், ஆதம்பாவா தௌபீக் ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

“பௌத்தர்கள் இருக்கின்றார்கள், பௌத்தர்களுக்கு விரோதமாக மஞ்சள் காவியுடை உடுத்த ஒரு குழுவினர் வந்து அவர்களுடைய விகாரைகளுக்கு விரோதமாக செயல்படுகின்றார்கள். அவர்களுடைய தர்ம போதனைக்கு விரோதமாக செயல்படுகின்றனர். பௌத்த பிக்குமார்கள் சிலர் அதே போன்று எங்குமிருக்கலாம். அதன் பின்னணியைச் சொல்லுகின்றேன். அன்று தம்புள்ளையில் தேரர் வந்து இந்தப் பள்ளியில் தொழக்கூடாது என்று சொன்ன தகவல் வந்தது. அன்று நாங்கள் எல்லோரும் ஒன்றாக கூடினோம். அதில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதி அமைச்சர்களான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ், பசீர் சேகுதாவுத் (அவர் இப்போ எங்கே இருக்கின்றார் என்று எனக்குத் தெரியாது தேடிப் பாக்கின்றேன் என் கைக்கு அகப்பாட்டால் உங்களுக்குக் காட்டுகின்றேன்), ஏ.ஆர்.எம்.அப்துல் காதர், பைஸர் முஸ்தபா எல்லோரும் கூடினோம்.

அதிலே நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் ஒப்பமிட்டோம். இப்படியொரு சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இதை நீங்கள் ஜனாதிபதியிடம் சென்று தலையிட்டு இதனை தீர்த்திருக்கின்றீர்கள். உங்களுக்கு நன்றி. ஆனால் அந்தப்பள்ளி வாசலுக்கு உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் ஒரு கடிதம் எழுதினோம். எல்லோரும் ஒப்பமிட்டு. அதில் இன்னொருவரும் ஒப்பமிட்டார். அவர்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம். இந்த உண்மையை சொன்னார்களா? சொல்வார்களா? உண்மையை தெரிந்தவன் நான், இருந்தவன் நான். ஆகவேதான் உங்களுக்கு விரிவாகச் சொல்லுகின்றேன். இப்படியிருக்க எப்படிச் சொல்வார்கள் பள்ளிவாசலை உடைத்ததாக.

இதனால்தான் நான் றவூப் ஹக்கீமிடம் ஒரு சவால் விடுத்து வருகின்றேன். என்னைக் கூட்டிச் செல்லுங்கள், இலங்கையில் எந்தப் பள்ளிவாசலுக்காவது. ஒரு பள்ளியாவது உடைக்கப் பட்டிருப்பதாகச் சொன்னால் நான் அனைத்து பதவியை விட்டு இராஜினாமாச் செய்வேன். நீங்களும் இதைத்தான் செய்ய வேண்டும். கூட்டிச் செல்லுங்கள் எந்தப் பள்ளிக்காவது.

தம்புள்ள பிரச்சினையை சொன்னாங்க. பொலிஸ்ஸை அனுப்பினோம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கக் கோன் போன்றவர்கள் சென்று நேரடியாக பிரச்சினையை முடித்து வைத்தோம்.

அது முடிந்த பிறகு இன்னும் கொஞ்ச நாளுக்குப் பிறகு குருநாகலில் வலல்லவ பொலிஸ் பரிவில் தெதிறு ஓயா கம பள்ளியை உடைக்கின்றனர் என்றார்கள். எங்கேடா உடைக்கின்றான் பள்ளி வாசலை? உடைத்தால் பார்த்துக் கொண்டாயிருக்கிறீர்கள்? எடுடா ஒரு வாளை, அவனும் வாளோடு வரட்டும் பைட் பண்ணுங்கள்.

குருநாகலில் பள்ளிவாசலில் பொலிஸ் படை, விமானப்படை, மற்றப் படைகள் எல்லாப் படைகளும் சென்று அவர்களை விரட்டியடித்தாச்சு. என்னவென்றால் பிரித் ஓதுகின்றார்கள். ஓதிட்டுப் போகட்டும் பரவாயில்லை. ஆனால் பள்ளி உடைக்கவில்லையே, அடிக்கவில்லையே எப்படியும் அன்று இரவே பள்ளியில் தொழுகையில் ஈடுப்பட்டார்கள்.

தெஹிவளையிலும் இப்படியான சின்ன சம்பவம்தான் நடந்தது. அங்கே வீட்டை ஒரு பள்ளி வாசலாக நாங்களே மாற்றிக் கொண்டோம். நாங்களும் போவோம், பெண்களும் போவார்கள். அங்கே தராவிஹ் போவோம். இப்படியாக தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும் ஜும்ஆ கிடையாது.

ஆனால் குறுக்கு நாநாமார்கள் கையஸ் வேன், பெரிய வேன், கொரியவேன், ஜப்பான் வேன் என அனைத்தையும் நடுப்பாதையில் வைத்து விட்டு தராவிஹ் தொழப் போகின்றார்கள். நான் இது தப்பென்று. பாதையிலே போகின்ற ஏனைய மக்களுக்கு இடைஞ்சலாக அங்கே நீ உன்னுடைய வாகனங்களையெல்லாம் நிறுத்தி விட்டு பள்ளிவாசலில் தொழுவது சரியா? இதுதான் நடந்தது.

தெஹிவலைச் சம்பவம் நடந்த அந்த வீடு பள்ளியில் சூடு தாங்காமல் இருந்தது. ஆனால் இப்போது குளு குளு பள்ளிவாசல். முழுமையாக எயார் கண்டிசன் போடப்பட்டிருக்கிறது. இதனை இவர்கள் சொன்னார்களா ?

தம்புள்ள பிரச்சனைகளை நாங்கள் தவிர்த்தோம். அந்த ஆவேசத்தை ஏனைய பள்ளிவாசல்களிலும் இடம்பெற விடாமல் தவிர்த்தோம். இதன் மூலம் முழு இலங்கையிலும் பரவ இருந்த பெரியதொரு கலகம் நிறுத்தப்பட்டது. இன மோதல் நிறுத்தப்பட்டது.

யாழ்பாணத்திலிருந்து 25 ஆயிரம் பேர்களை - எங்கள் அன்பு மாதாக்களை, தாய்மார்களை, குழந்தைகளை உடுத்திய அரைகுறை துணிகளோடு விரட்டினார்களே அந்தப் புலிகளுடைய ஊது குழலாக இருக்கின்ற பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் சேர்ந்து இந்த மாகாண முதலமைச்சர் பதவியை பெறுவதாக சொல்லுகின்றார். மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும் விடுதலைப் புலிகளால் 79 பள்ளிவாசல்கள் உடைத்து தகர்த்து தரைமாக்கப்பட்டிருக்கின்றன. ஹதிஜா வித்தியாலயம் உலகப் புகழ்பெற்ற அமானியா பல்கலைக்கழகத்தை போன்ற சுமானியா பாடசாலைகளை  உடைத்தார்கள்.

இந்த அரசாங்கத்தில் ஒரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை, உடைக்கவும் விடவும் மாட்டோம் அந்த மியன்மார் போன்று. இந்த அசம்பாவிதம் இந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்திருக்கின்றது. இது நியாயமா? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் இங்கொன்றும் வட மத்திய மாகாணத்தில் இன்னொன்றுமாக - இங்கே மரம், அங்கே வெற்றிலையென்றும் பேசுகின்ற விடயங்கள் எல்லாவற்றையும் எல்லோருக்கும் தெரியும்..” என்றார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் கடற்தொழில் நீரியல் வளத் துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, புத்தசாசன மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எச்.குணவர்த்தன, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதியின் முஸ்லிம் சமய ஆலோசகர் கலீல் மொளவி போன்ற பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்கள்.



You May Also Like

  Comments - 0

  • Riyas Saturday, 01 September 2012 01:46 PM

    நீங்கள் கூறும் அத்தனையும் இந்த மனிதனிடம் இருந்தால் கொப்பு மாறி மாறி அந்தப்பட்டியலை பெற்று இந்த வேலை செய்வாரா?

    Reply : 0       0

    NALAM VIRUMBI Tuesday, 04 September 2012 01:12 PM

    எங்கயாவது மானம் சொரன வித்தால் சொல்லுங்கள்.

    Reply : 0       0

    Aranejjan Sunday, 02 September 2012 01:42 PM

    யுத்தம் முடிந்ததும் பள்ளியை வைத்து அரசியல் பொழப்பு நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. உடைக்கிறார்கள் என்று சொல்பவர்களும் உடைக்கவில்லை என்று சொல்பவர்களும் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    Mohamed Sunday, 02 September 2012 07:53 AM

    இது எல்லாம் ஒரு பொலப்பா?

    Reply : 0       0

    mohamed Sunday, 02 September 2012 06:17 AM

    பள்ளிவாசலில் அட்டகாசம் செய்த யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா? சொல்லுங்கள் அஸ்வர் அய்யா?

    Reply : 0       0

    jesmin Sunday, 02 September 2012 05:42 AM

    இவர் சொல்வதை கேட்கவேண்டுமா. பேசுவதைக் கேட்டு சிரிப்போம்.

    Reply : 0       0

    shan Saturday, 01 September 2012 09:38 PM

    பாருங்கோ அவரு பதவிய காலி பண்னிட்டு அதோ போகிராருங்கோ??? (கூடிய விரைவில்)

    Reply : 0       0

    faroos Saturday, 01 September 2012 06:07 PM

    சுவர் உடைக்க்ப்பட்டால்தானா உங்கள் dictionary
    உடைக்கப்பட்டது என்று சொல்லுமா
    இல்லை உள்ளே புகுந்து கலவரம் செய்து உள்ளே இருந்த சாமான்களை உடைத்தது உ யாரும் சொல்லவில்லையா?

    Reply : 0       0

    Kanavaan Saturday, 01 September 2012 05:31 PM

    உங்கட முகம் நல்ல வெளிச்சமாத்தான் தெரியுது. நீங்க பிடிக்கிற பந்தத்தில. எதுக்கும் பந்தத்தைக் கொஞ்சம் குறைச்சால்தான் சார் எல்லாருக்கும் நல்லது. இப்படிப் பௌத்தர்களுக்கும், விகாரைகளுக்கும், பள்ளிவாசல்களுக்குக் எதிராகச் செயல்படுபந்வர்களை ஏன் சார் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை?

    Reply : 0       0

    shafi Saturday, 01 September 2012 04:51 PM

    சும்மா போறீங்களா கடுபேத்தாம

    Reply : 0       0

    கிழக்கன் Saturday, 01 September 2012 03:19 PM

    தம்பிமாரே நாநாமாரே சாரைக் கொஞ்சம் உட்டுப்போடுங்கோ. சூடு, சொரணை, மானம், வெட்கம் இதெல்லாம் விக்கிற சுப்பர் மார்க்கட் ஏதாச்சும் இருக்கெண்டு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கோ.

    Reply : 0       0

    Manithan Saturday, 01 September 2012 02:13 PM

    முதல் அத செய்ங்க அஸ்வர் எம்.பி. (மானம், மரியாதை இருந்தால் மட்டும்)

    Reply : 0       0

    Manithan Saturday, 01 September 2012 02:09 PM

    இவர் முஸ்லிம் தானா?

    Reply : 0       0

    Manithan Saturday, 01 September 2012 02:07 PM

    உண்மைதான் அஸ்வர் எம்.பி. பள்ளி வாசல உடைக்கல்ல...
    உடைக்கும் போதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்போதும் அஸ்வர் எம்.பி.
    மரணித்து விட்டார் போல...

    Reply : 0       0

    Riyas Saturday, 01 September 2012 01:49 PM

    ஐயா பாருங்கள் அவா் காதுக்கு பஞ்சு வைத்து அடைத்திருக்கிறார். அதுபோல கண்ணுக்கு கண்ணாடி (குருட்டுக் கண்ணாடி) அணிந்திருக்கிறார். அதுபோல அவரது சிந்தனைக்கும் உள்ளத்திற்கும் உருக்கு வளை போட்டிருப்பார்! பிறகு அவா் சொல்வது அவரைப் பொறுத்தவரை நியாயம் தானே !

    Reply : 0       0

    lasdunas Saturday, 01 September 2012 05:59 AM

    அட.....

    Reply : 0       0

    ML Gafoor Saturday, 01 September 2012 01:42 PM

    கனவான் ஹாஜியார் அவா்களே! அமைச்சா் றிசாட்டைக் கூட்டிக் கொண்டு அவா் அண்மையில் வாழைச்சேனையில் கூறிய பள்ளி வாயல்களுக்கு போய் வந்துவிட்டு உடன் உங்களது பதவிகளை (????) துறந்து விடுங்கள். தொடர்தும் சேவகம் செய்யாதீா்கள். குழுக்களால் பள்ளிவாயல்களுக்கு தொந்தரவு நடக்குமென்றிருந்தால் அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்குத்தான் என்று புரியாத அமைச்சா்மார் எமக்கெதற்கு???

    Reply : 0       0

    ACM Saturday, 01 September 2012 01:36 PM

    ஐயா ஹாஜியார் அவா்களே! பள்ளியை உடைப்பதும் உடையாமல் அதனை அசிங்கப்படுத்துவதும் எம்மைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். இவைகளினால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்பைவிடவும் உங்களைப் போன்ற ஹாஜிமார்களினால் சமூகத்திற்கு ஏற்படும் அசௌகரிகம் அதிகம். ஆகையால் உங்களது பதவி விலகலை விரைவாகச் செய்யுங்கள். அதன்மூலம் சமூகத்திற்கு மன ஆறுதலாவது கிடைக்கட்டும். உங்களது பதவி விலகலினால் உங்களுக்கு வாக்களித்த (????) அவங்களுக்குத்தான் பெரிய பாதிப்பு வரும்... கீ... கீ.. கீ...

    Reply : 0       0

    rifkhan Saturday, 01 September 2012 12:06 PM

    ஜனாதிபதி உங்களை ஏற்கனவே விலக்க முடிவு பண்டிட்டாரோ...?

    Reply : 0       0

    shan Saturday, 01 September 2012 11:36 AM

    உடைக்கவந்தாங்க விரட்டி அடிச்சோம்... ஆமா நீங்க எப்ப கட்சி தாவப்போரீங்க?? அப்ப சொல்லுவீங்க உண்மையை...

    Reply : 0       0

    Ihjas AFM Saturday, 01 September 2012 10:59 AM

    ஐயா நீங்கள் வாருங்கள் உடைத்த பள்ளியை காட்டுகின்றோம் கருமலையுற்றில் ஒரு வாரத்தில் பெற்றுத் தருவதாக சொல்லி விட்டுச் சென்றீர்களே எங்கே?

    Reply : 0       0

    irakkakandyan Saturday, 01 September 2012 10:44 AM

    அனுராதபுறத்தில் இருந்த தக்கியாவை உடைத்தது யாருங்கோ ,,,,,,,,,,, தெஹிவளையில் இருந்த பள்ளியில் தோழா வேண்டாம் என்று தடுத்தது யாருங்கோ.......... , தம்புள்ளையில் வெள்ளிக்கிழமை ஜும்மா தோழா விடாமல் பள்ளியில் இருந்தவர்களை வெளியே அனுப்பி உள்ளே இருந்த பேன் லைட் எல்லாம் உடைத்தது யாருங்கோ,............ குருநாகலையில் பள்ளிக்கு முன்னாள் வந்து அதை முட வேண்டும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் யாருங்கோ............ , மேல்சிரிபுரத்திற்கு அருகில் பள்ளி கண்ணாடி உள்ளே இருந்த பேன் எல்லாம் உடைத்து யாருங்கோ.............,ராஜகிரியையில் இரண்டு நாட்கள் பள்ளியை முட வைத்தவர்கள் யாருங்கோ......லிஸ்ட் நீளுதுங்கோ ஆனால் எழுத கை வலிக்குதுங்கோ மனசும்தான் வலிக்குதுங்கோ.... கொஞ்சம கூட மனச்சாட்சி இல்லாம பேசுரிங்கோ,,,,,, பள்ளி உடைத்ததை அல்ஜசீரா சனல் மூலம் உலகமே பார்த்தது . இவருக்கு மட்டும் தெரியாம போச்சி .....என்ன கொடுமை இது.

    Reply : 0       0

    Miswer Saturday, 01 September 2012 10:37 AM

    தம்புள்ள பிக்கு செய்த பிரச்சாரம் கூட்டிஎடுத்த சனங்களை பார்த்தோமே, தடுத்ததை கதைக்கிறார், ஏன் செய்கிறார்கள்? அதைப்பேசமுடையாத? ராஜகிரிய தராவீஹ் நடக்கலயே? தெஹிவல மூட கடிதம் வந்துட்டே, வெட்கமா இல்ல?

    Reply : 0       0

    RR Saturday, 01 September 2012 10:01 AM

    வெட்கம் மானம் மரியாதை கிடையாதா?

    Reply : 0       0

    Haniff Saturday, 01 September 2012 08:51 AM

    தூங்கிற மாதிரி நடிச்சா என்ன பண்ணலாம்..... ஆள விடுங்க சாமி...

    Reply : 0       0

    sabeer mohammed Saturday, 01 September 2012 07:20 AM

    நீங்கள் கூறியபடி அனைத்து பதவிகளையும் விட்டும் இராஜினமான செய்யும் நாள் வெகுசீக்கரத்தில் வந்திடும்போல் தெரிகிறது. பள்ளிவாசளிற்கு முன் நின்றுகொண்டு ஒரு கூட்டம் பிரித் ஓதி கூச்சல் இட்டு குழப்பும் போது பயமின்றி யாரும், பயபக்தியுடம்,தொழுகையில் ஈடுபடமுடியுமா? மத சுதந்திரம் எங்கே? இது பற்றி தைரியமாக கேள்விகள் கேட்கமுடியுமா உங்காளால்? இல்லை பயம் பதவி போய்விடுமென்று?.........சிந்தித்து கதையுங்கள்

    Reply : 0       0

    rima Saturday, 01 September 2012 07:04 AM

    விலகுறத நாங்கள் நம்பிவிட்டோம்.

    Reply : 0       0

    gm Saturday, 01 September 2012 07:01 AM

    நல்ல விடயம் சொன்னார் அமைச்சர்... உடைக்க வில்லயாம். ஆனால் தொந்தரவு கொடுப்பார்கலாம். நல்லா இருக்கு கத.......

    Reply : 0       0

    aj Saturday, 01 September 2012 06:19 AM

    வாள் வெட்டு குத்து .. பயங்கரம் நாளுக்கு நாள்... இந்த விளைவுகளை இலங்கை உணர ஆரம்பித்து இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X