2025 மே 07, புதன்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஸ்குமார் பிணையில் செல்ல அனுமதி

Super User   / 2012 செப்டெம்பர் 03 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (ரமன், கஜன்)

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் சுரேஸ்குமார் இன்று திங்கட்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற  நீதிபதி அ.பிறேம்சங்கர்  முன்னிலையில் சுரேஸ்குமார்  இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, 10 இலட்சம் ரூபா காசு பிணையிலும் ஆறு பேரின் சரீர பிணையிலும் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ்குமாரை தினமும் பொலிஸ் நிலையத்தில்  கையொப்பமிட வேண்டும் என மேல் நீதிமன்ற  நீதிபதி அ.பிறேம்சங்கர்  உத்தரவிட்டார்.

நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, அவுஸ்திரேலியாவிற்கு மீன்பிடி படகுகள் மூலம் திருகோணமலையிலிருந்து சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த மாதம் இவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் சுரேஸ்குமார் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X