2025 மே 07, புதன்கிழமை

'அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயந்து இனியும் நாம் வாழ முடியாது'

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (கஜன்)
'அடாவடித்தனங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயந்து இனியும் நாம் வாழ முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நாம் அனைவரும் ஒருமித்த  நிலையில் பாடுபட வேண்டும். எதிர்வரும் கிழக்கு  மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் வெற்றி சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் சார்பான நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும்' என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை, பத்தாம்குறிச்சியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'மூதூர் பிரதேசத்தில் சிலர் தமிழ் வாக்காளர் வீடுகளுககுச் சென்று வாக்கு அடடைகளை பறிததுச் செல்வதோடு  அச்சுறுத்தி விட்டும் செல்கின்றனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பொறுக்காத ஆளும் தரப்பினர் தமது ஆதரவாளர்களைக் கொண்டு அச்சுறுத்தல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயமக நாம் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடும் செய்துள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற  உறுப்னர்களான செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X