2025 மே 07, புதன்கிழமை

கிழக்கின் நவோதயம் மூலம் பல அபிவிருத்திகளை செய்கின்றோம்: கிண்ணியாவில் ஜனாதிபதி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


'கிழக்கின் நவோதயம் மூலம் உங்கள் பகுதியில் பல அபிவிருத்தி பணிகளை வேகமாக நடாத்தி கொண்டிருக்கின்றோம். கல்வி வளர்ச்சி, வீடு வசதி, மின்சார வசதி, விவசாய வசதி, சுகாதார வசதி ஆகிய வசதிகளை உங்கள் பிரதேசத்திற்கு செய்து கொடுத்துள்ளோம். இன்னும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி முஹம்தியா விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது.

'கிண்ணியா பாலத்திற்கு எத்தனையோ அத்திவாரம் போட்டப்பட்டன.  ஆனால் நாங்கள் செய்து முடித்தோம். நாம்; சொல்வதையே செய்வோம், செய்வதையே சொல்வோம். உப்பாறு பாலம், மின்னேரிப் பாலம், கங்கை பாலம், இறால் குழிப் பாலம், வெருகல் பாலம், காயங்கேணிப் பாலம் இவையனைத்தும் யாருக்காக? அனைத்தும் உங்களுக்காக. உங்கள் பிள்ளைகளுக்காக. 

இந்த நாட்டில் இன, மத, குல, பேதம் இருக்க முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று இனவாத அரசியல் வேண்டாம். நாங்கள் எல்லோரும் ஒன்றாக சகோதர சகோதரிகளை போல் வாழ ணே;டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களே. எல்லோரும் சம உரிமையோடு வாழ வேண்டும். அதுதான் எமது தேவை. அதுதான் எமது நோக்கம். எங்கள் மக்களை பாதுகாப்பதும் எமது கடமை.

இப்போது பயமில்லாமல் பள்ளிவாசல்கள் போகலாம், பிரயாணம் செய்யலாம். கடலுக்குப் போகலாம், எங்கும் பயணிக்கலாம். எந்தப் பயமும் இல்லை. இனவாதம், மத பேதம் பேசி உங்களை தவறான வழியில் கொண்டு செல்ல பிறர் முயற்சி செய்கின்றார்கள். உங்கள் எதிர்காலம் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும் அதுதான் பெரிய செல்வம்.

உங்கள் நாடு முன்னேற, உங்கள் நகரம் முன்னேற, உங்கள் பிரதேசம் முன்னேற அப்பொழுது உங்கள் மாவட்டம் முன்னேறும். உங்கள் மாகாணம் முன்னேறும். நீங்கள் உங்கள் வேலையைச் செய்தால்தான் உங்களுக்கும் வசதி, எங்களுக்கும் வசதி. மற்றும் எல்லோருக்கும் வசதி. உங்களை நான் வந்து பார்ப்பேன் மறக்கமாட்டேன். இது நிச்சயம். நான் உங்கள் தோழன். உங்கள் சொந்தக்காரன். நீங்கள் என்னை நம்புங்கள். வெற்றிலைச் சின்னத்தை மறக்கவேண்டாம். வெற்றிலை வெற்றி உங்கள் வெற்றி என்றார்.

நான் உங்கள் பிரதேசத்திற்கு இத்துடன் மூன்றாவது தடவை வந்திருக்கின்றேன். முதலாவதாக எனது தேர்தல் சமயத்தில் வந்தேன். இரண்டாவதாக நீண்ட பாலமான கிண்ணியா பாலத்தை திறந்து வைப்பதற்கு வந்தேன்.

நாங்கள் இந்த 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் காலம் இந்தக் காலம். விடுதலைப் புலிகள் செய்த வேலையைப் பற்றி நான் உங்களுக்குப் புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

1970 ஆம் ஆண்டு எங்களுடைய நஜீப் என்பவருடைய தந்தையார் என்னோடு நாடாளுமன்றத்தில்
ஒன்றாக இருந்தார். அப்போது நான் ஒரு வாலிபராக இருந்தேன். நானும் அவரும்  நல்ல நண்பர்கள்.

இந்த மண்ணிலிருந்து ஒரு குழுவினரை விரட்டி அடிப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணத்தில்; இருந்தவர்கள் அன்று முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள். பள்ளி வாசலை உடைத்தார்கள். ஆனால் அவையெல்லாம் திருத்தி அமைத்து மீண்டும் அவர்களுக்கு சுக வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்கின்றோம்.

பலர் இப்போது வந்து இனவாதம் பேசுகின்றார்கள். மத வாதம் பேசுகின்றார்கள். மத வாதத்தையும் இனவாதத்தையும் தூண்டித்து விட்டு அரசியலை நாடாத்துவதற்கு எனவே ஜனாதிபதி ஒரே கட்சியைச் சார்ந்தவர் கொள்கைக்கு சார்ந்தவர் அதேபோன்று அவர்களின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையான பலத்தை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கின்றார்கள். அதேபோன்று  மாகாண சiபில் வைத்திருக்கின்றார்கள். பிரதேச சபைகள் அனைத்திலும் அரசாங்க கட்சிதான் இன்று ஆட்சியிலே வைத்திருக்கின்றன என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

மாகாண சபையிலே அதே போன்று பிரதேச சபையிலே அனைத்திலும் ஜனாதிபதியின் கட்சிதான் இன்று ஆட்சியை வைத்திருக்கிறது என்று உங்கள் பிரதேச சபையுடைய தலைவர் கூறியது போன்று இப்பிரதேச அபிவிருத்திக்காக எல்லோரும் இருசாராமும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். இன்று வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் அதை நீங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X