2025 மே 07, புதன்கிழமை

இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் அதிகாரிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்திக்கவுள்ளனர்

Super User   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அதிகாரிகள் குழு தமிழ்  தேசிய கூட்டமைப்பையும் சந்திக்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

செல்வநாயகபுரம் என்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இத்தகவலை வெளியிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அனுப்பிய செயல்திட்ட அறிக்கை தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்புக்கு இம்மாதம் 14 ஆம் திகதி வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அதிகாரிகள் குழு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பையும் சந்திக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அனுப்பிய செயல்திட்ட அறிக்கை திருப்திகரமாக அமையவில்லை என்றே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கருதுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி பொறுப்புக்கூறுவது தொடர்பாக உண்மையை அறியும் விசாரணையிலிருந்து இலங்கை அரசாங்கம்  விலக வேண்டுமானால் அதே தீர்மானத்தில் கூறப்பட்டபடி அதிக பட்ச அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைத்தே ஆக வேண்டும்.

அது வரை போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக உண்மை அறியும் விசாரணை நடைபெறவேண்டும் என்ற அழுத்தம் தொடரும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X