2025 மே 07, புதன்கிழமை

ஆரியவதி கலபதிக்கு அமைச்சர் பதவி வழங்க கோரிக்கை

Super User   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


கிழக்கு  மாகாண சபைக்கு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆரியவதி கலபதிக்கு அமைச்சர்  பதவி வழங்க வேண்டும் என கிழக்கின் தேசிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருகோணமலை நியூசில்வர் ஸ்டார் விடுதியில் ஊடக  சந்திப்பு  ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்டது. இதில் கிழக்கின் தேசிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.

சீனக்குடா தெய்யோவிற்ற பியதிஸ்ஸ தேரர். ஆண்டான்குளம்  கணமள்தெனிய  விபுல் திஸ்ஸ தேரர்இ  கண்டி வீதி 5ஆவது மைல் கல் ஒக்கந்த யாவ ஜினரத்ன தேரர்,  மட்கோ தொடந்துவ கம்மானந்த தேரர், சங்கமித்த மிகுந்தபுர  மகிந்தானனந்த தேரர் மற்றும்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு  மாகாண  சபை தேர்தலி்ல் திருகோணமலை வேட்பாளர் ஆரியவதி கலபதியின் வெற்றிக்காக  உழைத்த அரச உத்தியோகத்தர்களும் ஆதரவாளர்களும் கலந்த கொண்டிருந்தார்கள்.

இவர்கள் அனைவரும் கிழக்கு  மாகாண சபையில் ஆரியவதிக்கு  அமைச்சு பதவி வழங்க  வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்தனர். திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு  மாகாண  சபைத் தேர்தலில்  போட்டியிட்டு குறைந்த வாக்குகளுடன் தெரிவான  நஜீப் ஏ மஜீதுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கிழக்கு  மாகாணத்தில் இருந்து தெரிவான ஒரே ஒரு பெண் உறுப்பினரும். திருகுாணமலை மாவட்டத்தில் அதிகூடிய  விருப்பு வாக்கு  பெற்றவருமான  ஆரியவதி கலபதிக்கு  ஏன் ஒரு அமைச்சு  பதவி வழங்கப்பட கூடாது என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மட்டக்களப்பு, அம்பாறை  மாவட்டங்களுக்கு  அமைச்சு பதிவிகள் வழங்கப்படும் போது ஏன் திருகோணமலை மாவட்டத்திற்கு ஒரு அமைச்சு பதவி வழங்கப்பட கூடாது எனவும் அவரகள் கேள்வி எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0

  • Muthur Amuthan Sunday, 23 September 2012 06:06 PM

    நல்ல கேள்வி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X