2025 மே 07, புதன்கிழமை

சாரணர் சங்க ஒன்றுகூடல் ஒத்திவைப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                 (கஜன்)
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த மாவட்ட சாரணர் ஒன்றுகூடல் எதிர்வரும் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்கள் இவ் ஒன்றுகூடல் நிகழ்வு  திருகோணமலை மெக்கெய்வர் மைதான வெளியரங்கில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் பருவமழை பெய்வதற்கு ஆரம்பித்துள்ளதால் மெக்கெய்சர் மைதானத்தில் கூடாரங்கள் அமைப்பதற்கு ஏற்ற நிலைமை இல்லாமல் காணப்படுகின்றது. இந்நிலையில் இவ் ஒன்றுக்கூடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சாரணர் ஆணையாளர் செ.பத்மசீலன் தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இவ் சாரணர் சங்க ஒன்றுகூடல் நிகழ்வின் போது திருகோணமலை  குளக்கோட்ன்  தோப்புக்கு முன்னால் சாரணர் சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X