2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் கன்னியமர்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 28 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு நாளை மறுதினம் எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள மாகாண சபையின் மாகாண பேரவையில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் முதல் நிகழ்வாக சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நடைபெறும். இதனையடுத்து இச்சபையின் தவிசாளர் பிரதித் தவிசாளர் தெரிவுகள் இடம்பெறும்.

உறுப்பினர்களின் வாக்களிப்பின் அடிப்படையில் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர்களை தெரிவு செய்யவுள்ளனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் உரை இடம்பெறும். இதன் பின்னர் சபை ஒத்தி வைப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • muba Friday, 28 September 2012 02:34 PM

    நல்லவிசயம்

    Reply : 0       0

    sivanathan Friday, 28 September 2012 02:50 PM

    சபை அமர்வு காலை 11 மணிக்கு என்று அழைப்பிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .