2025 மே 08, வியாழக்கிழமை

நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

ஜேர்மன் நாட்டின் அனுசரணையில் 'திரிசீடி' அமைப்பினால் பாடசாலை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் குடிநீரை சேகரித்து வழங்கும் வகையில் இந்நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

'திரிசீடி' அமைப்பின் பிரதித் தலைவர் எம்.எஸ்.எம்.அமானுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், எஸ்.சீ.ஐ.அமைப்பின் போதனாசிரியர் கிறிஸ்டி ரோய், மூதூர் வலயக் கல்விப் பணிமனையின் திட்டமிடல் உதவியாளர் எம்.எஸ்.எம்.றமீம், 'திரிசீடி' அமைப்பின் செயலாளர் ஏ.டபிள்யு.எம் புஹாரி மேற்பார்வை சுகாதார பரீசோதகர் பீ.கே.முனீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X