2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

மூதூர் கரையோரங்களில் கடலரிப்பு

Super User   / 2012 நவம்பர் 01 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடற் கொந்தளிப்பினால் மூதூர் கரையோர கிராமங்கள் தீவிர கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள தக்வா நகர், ஹபீப் நகர், பஹ்ரியா நகர் முதலான கரையோர கிராமங்களில் சுமார் 3 கிலோ மீற்றர் வரையான கரையோர  பகுதிகளில் குறுக்காக சுமார் 10 மீற்றர் வரையான நிலப்பகுதி கடல் கொந்தளிப்பினால் காவு கொள்ளப்பட்டுள்ளது.

கடற் கொந்தளிப்பின் போது கடலரிப்பை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது விடில் இக்கரையோர  கிராமங்கள் அழிவடையும் அபாயம் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .