2025 மே 10, சனிக்கிழமை

கட்டார் விபத்தில் மூதூர் இளைஞன் பலி

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)
கட்டார், ரையான் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூதூர் பெரிய பாலம் பகுதியைச் சோந்த அப்துல் சலாம் அக்ரம் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிழந்துள்ளார்.

கட்டார், ரையான் நகரில் விற்பனை பிரதிநிதியாக தொழில் புரிந்து வந்த இவர் வீதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை கடக்க முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாஸாவை கட்டாரில் அடக்கம் செய்யப்பட்டதாக மூதூரிலுள்ள அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விடுமுறையில் வீடு வந்த இவர் கடந்தவாரம் மீண்டும் கட்டாருக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X