2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

கிண்ணியாவில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

திருகோணமலை, கிண்ணியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை மீட்டுள்ளனர்.

கிண்ணியா, மயிலப்பன்சேனை பகுதியிலேயே இச்சடலத்தை கிண்ணியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சடலம் தம்பலகாமம் பட்டிமேட்டைச் சேர்ந்த கோணமலை சகாதேவன் என்பவரது சடலமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா, ஈச்சந்தீவூ பகுதியில் வாழ்ந்துவரும் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

இவர் கிண்ணியா கண்டல்காடு பகுதியில் மாடுகளை பார்வையிட்டுவிட்டு திரும்புகையில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென உறவினர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .