2025 மே 10, சனிக்கிழமை

ரிசான நபீக்கின் மரண தண்டனை தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


மூதூர், ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதனை தொடர்ந்து  முக்கியஸ்தர்களின் கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை இரவு மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் இடம்பெற்றது.

மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைவர் மௌவி எம்.எம்.கரீம் நத்வி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஜம்மியதுல் உலமா, கதீப்மார்கள் சம்மேளனம், மூதூர்  பள்ளிவாசல்கள் சம்மேளனம்  முதலானவற்றின் பிரதிநிதிகளோடு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 'ஷரீஆ' சட்டத்தின்;படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றோம், மரணித்த குழந்தையின் தாயிடம் றிசானாவை மன்னிக்கும் படி கோரிய அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மூதூர் பிரதேச மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம், 'ஷரீஆ' சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பான சரியான புரிதலை சகோதர இனத்தவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு முயலுகின்றோம், ரிசானாவின் குடும்பத்தவரது அவல நிலையைப் போக்கும் வகையில் நலன்புரிச் சேவைகளை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ளவர்களை அழைக்கின்றோம், 'ஷரீஆ' சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக எந்தவோர் வகையிலும் எவரும் செயற்படாதிருப்பதற்கு அனைவரும் இணங்கிக் கொள்கின்றோம், மரண தண்டனைக்குள்ளான சகோதரியின் மறுமைவாழ்வு ஜெயம் பெறுவதற்கு அல்லாஹ்வைப் பிரார்த்திக்குமாறு  அனைத்து உள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றோம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  



You May Also Like

  Comments - 0

  • Osama Thursday, 10 January 2013 06:47 PM

    கிணற்று தவளை மாதிரி வீட்டுக்குள்ளே இருந்துகொண்டு உங்களது முடிவுகளை தீர்மானங்களை வெளியிடாதீர்கள். எது ஷரியா என்று நினைக்கிறீர்கள்? செய்யாத குற்றத்திற்கு தண்டனை வழங்குவதையா மார்க்கம் ஷரியா என்று கூறுகிறது? ரிசானாவின் விடயம் தொடர்பில் மூன்று வருடங்கள் அவ்வப்போது வெளியாகும் உலகம் வெளியிடும் அணைத்து செய்திகளையும் படித்தவன் நான். ஒருநாளும் ரிசானா கொடுத்த வாக்குமூலத்தில் அது கொலை என்று சொல்லவில்லை. கொலை என்று நம்பும் அம்மனிதர்கள் கூட மரணித்த உடலை இற்றைவரைக்கும் பரிசோதித்து ஊர்ஜிதப்படுத்தவில்லை. மொத்தத்தில் இது ஒரு அநியாயமான முடிவு.

    Reply : 0       0

    Hussain Thursday, 10 January 2013 08:08 PM

    சரீஆ சட்டம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் ஆனால் நீங்கள் ஒன்று கூடி என்ன புதிய விடயங்களை அமுல் படுத்தினீர்கள் உதாரணமாக ஆண்கள் சீதனம் கேட்பதை நிறுத்த தீர்மானித்தீர்களா? அல்லது பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்துவதற்கு தீர்மானித்தீர்களா? அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏதும் உதவி செய்ய தீர்மானம் எடுத்தீர்களா? அல்லது செல்வந்தர்கள் ஷகாத் கொடுத்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? சும்மா கூடி கூடி கலைவதே உங்கள் வேலையா போச்சி, ஒரு பிரயோசனமும் இல்லை...

    Reply : 0       0

    danush Saturday, 12 January 2013 05:43 AM

    இந்த மிருகத்தனமான சட்டங்களை விட்டிட்டு மனிதனாக நடக்க எதும் முயற்சியை எடுக்க தீர்மானம் எடுங்கப்பா.

    Reply : 0       0

    man Saturday, 12 January 2013 08:05 PM

    சட்டம் ஒன்றும் மிருகத்தனம் இல்லை. சட்டம் செய்பவன் அப்படி இருக்கலாம், இப்படி சட்டம் இருந்தால் தான் தப்பின் பெறுமதி தெரியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X