2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தேசிய மீலாத் நபி விழாவிலும் சர்ச்சை

Super User   / 2013 ஜனவரி 10 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி, எம்.பரீத்

2013ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் நபி விழா திருகோணமல மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது என முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சமீல் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது இந்நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதுவரை திருகோணமல மாவட்டத்தின் எந்த பிரதேசத்தில் நடத்துவது என தீர்மானிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள முன்னாள் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி தலைமையில் டிசம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின்போது மூதூர் பிரதேசத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் 2013ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் நபி விழா கிண்ணியாவிலேயே  நடத்தப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே தீர்மானித்தபடி மூதூரிலேயே 2013ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் நபி விழா நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில்  தேசிய மீலாத் நபி விழா தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை மாலை கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிழக்கு முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • mogamed Shafee Friday, 11 January 2013 10:09 AM

    கின்னியா பொருத்தமான இடம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .