2025 மே 10, சனிக்கிழமை

வாழை நார் தொழில்நுட்பம் அறிமுகம்

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


திருகோணமலையில் வாழை நார் தொழில்நுட்பம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

வாழை தடலில் இருந்து நார் பிரித்தெடுக்கப்பட்டு அதனைக் கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்ய முடியம். இதனை பிரித்தெடுக்கும் இயந்திரம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருகோணமலை  எலைவ் வென்சர் நிறுவனத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

சுமார், 400,000 ரூபாய்  பெறுமதியான இவ் இயந்திரத்தைக் கொண்டு தினம் குறைந்தது 20 கிலோ கிராம் நூல் பிரித்தெடுக்க முடியம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் இயந்திரத்தின் செயற்பாடுகளுக்கு மிகக் குறைந்தளவு மின்சாரமே தேவைப்படுகின்றது.

அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இயந்திரத்தை கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் முதல் கொள்வனவாக பெற்றுக்கொண்து.
இந்நிகழ்வில், நிதி நிறுவனங்களின்; முகாமையாளர்கள், வங்கி அதிகாரிகள், முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • rameshbabu.m Friday, 18 January 2013 02:17 PM

    இயந்திரம் விற்ப்பவர் முகவரி தொலைபேசி எண்கள் தேவை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X