2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் - யூஎஸ்எயிட் பிரதிநிதி சந்திப்பு

Super User   / 2013 ஜனவரி 29 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.குருநாதன்


கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்திற்கும் யூஎஸ்எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான பணிப்பாளர் போல் ரிசட்சனிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு பொறுப்பான பணிப்பாளர் கலாநிதி எம்.எம்.பீ கீர்த்திஸ்ரீ மற்றும் கடற்றொழில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அனுராத செனவினரத்தின உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .