2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வெள்ள நட்டஈடு; கிழக்கு முதலமைச்சரிடம் பொன் செல்வராசா எம்.பி. கோரிக்கை

Super User   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சி.குருநாதன்,  எம்.பரீட்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தார்.

அத்துடன் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் முதலமைச்சரிடம் விளக்கினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, அனர்த்த நிவாரண அமைச்சு மற்றும் மாகாண சபை ஆகியவற்றின் நிதி உதவிகளை பெற்று கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .