2025 மே 10, சனிக்கிழமை

ஈரானுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் விஜயம்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 21 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.குருநாதன்

ஈரான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தெஹ்ரானுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (23.02.2013 ) பயணமாகின்றார்.

தனது விஜயத்தின்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் ஈரானில் உள்ள மாநிலங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களின் பிரதான மூன்று நகரங்களை இணைத்துக் கொள்வது தொடர்பாகவும் ஈரான் அரச அதிகாரிகளுடன் முதலமைச்சர் நஜீப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார் என்று முதலமைச்சுச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலமைச்சர் நஜீப்புடன் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப்பும் ஈரான் விஜயம் செய்கின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X