2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தம்பலகாமம் தவிசாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Super User   / 2013 மார்ச் 19 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியானுக்கு இனந்தெரியாத நபரொருவரினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 14ஆம், 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் தொலைபேசி ஊடாக தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அவரின் உதவியாளருக்கும் கவனமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில் வெள்ளை வேனில் கடத்தப்படுவீர்கள் எனவும் அச்சுறுத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதின் இணைப்புச் செயலாளர் என்பதும் குறிப்பிடப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .