2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆயுர்வேத வைத்தியர்களின் சேவைக் காலத்தை நீடிக்க கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம்

Super User   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எச்.அமீர், எம்.பரீத், கியாஷ் சாபி

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் வைத்தியர்களின் சேவைக் காலத்தை நீடிப்பதற்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கப்பல்துறை, மகாஓயா, நாவலடி, நிந்தவூர், ஏறாவூர், புதுக்குடியிருப்பு, பதவிசிறிபுர மற்றும் கிண்ணியா ஆகிய ஆயுர்வேத வைத்தியசாலைகளிலும் கிளிவெட்டி மற்றும்  பதியத்தலாவ ஆகிய கிராமிய வைத்தியசாலைகளிலும்  ஒப்பந்த அடிப்படையில் கடமைபுரியும் வைத்தியர்களின் சேவைக் காலமே மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது மாகாண சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை சேவைக்காலத்தை நீடிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .