2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும்: உதுமாலெப்பை

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீதபொன்கலன், எஸ்.எச்.அமீர், எம்.பரீத், கியாஷ் சாபி

'திருகோணமலை, சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க கிழக்கு மாகாண சபை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும்' என்று  அமைச்சரவை பேச்சாளரும் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பில் திருகோணமலையில் இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சம்பூர் பிரதேசத்தில் இருந்து கடந்த 2006ஆம் ஆண்டு வெளியேறிய மக்கள் இன்றுவரை அங்கு சென்று மீளக்குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் காணி மற்றும் மீள்குடியேற்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
 
"பல்வேறு தரப்பினராலும் காலத்துக்கு காலம் சம்பூர் மக்களின் பிரச்னை குறித்து பேசப்பட்டு வருகின்றது. ஆனாலும் இன்று வரை அந்த மக்களின் உண்மையான பிரச்சனைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வுகள் குறித்து ஆராயப்படவில்லை என்பதே உண்மை.

எனவே இப்பிரச்சனை குறித்து உரிய தரப்பினர் அனைவருடனும் கலந்துரையாடி அம் மக்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பெற்றுக்கொடுக்க மாகாணத்தின் அமைச்சரவை ஊடாக முன் முயற்சியை நான் ஆரம்பிக்க விரும்புகின்றேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X