2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுயதொழிலை ஊக்குவிக்க நிதியுதவி

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


குச்சவெளி பிரதேச செயலகத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற விதவைகள்  மற்றும் மாற்றுவலுவுடையோரின் சுயதொழிலை ஊக்குவிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.அன்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்தே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்போது 15,000 ரூபா பெறுமதியான காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. குச்சவெளி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் அன்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டு கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மத ஸ்தலங்களுக்கான ஒலிபெருக்கி தொகுதிகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .