2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

வீடமைப்பு அதிகார சபையின் தலைமை அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீதபொன்கலன்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைமை அலுவலகம் எதிர்வரும் திங்கட்கிழமை(1) திருகோணமலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் மற்றும் கிராமிய மின்சார நீர் வழங்கல்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அண்மையில் மாகாண அமைச்சரவைக்கு சமர்பித்த முன்மொழிவை அடுத்து   மாகாண வீடமைப்பு அதிகாரசபை தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு ஒத்ததாக மாகாண மட்டத்தில் மாகாண நியதிச்சட்ட விசேட ஏற்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது.

திருகோணமலை கிறீன் வீதியில் அமைந்துள்ள இவ் அலுவலகம் மாகாண ஆளுநர் ரியர் அட்மிறல் மொஹான் விஐயவிக்கிரம மற்றும் முதலமைச்சர் நஐPப் அப்துல் மஐPத் ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் உற்பட அனைத்து அமைச்சு செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .