2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நுகர்வோர் அதிகாரசபை விதிமுறைகளை மீறிய வர்த்தகர்கள் 18 பேரிடமிருந்து ரூபாய் 67,500 தண்டப்பணமாக பெறப்பட்டுள்ளதாக அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எஸ்.நசீர் கூறினார்.

திருகோணமலை நகர், சீனன்குடா, கிண்ணியா போன்ற பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் கிடைக்கபெற்ற தகவல்களின் அடிப்படையில் அதிகாரசபையின் புலன்விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனைகளின்போது நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளை மீறிய வர்த்தகர்கள் இனங்காணப்பட்டனர்.

இதனை அடுத்து இவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அதிகாரசபையின் புலன் விசாரணையாளர்களான ஏ.ஆர்.சதாத், பி.ரேவதி மற்றும் எல்.தர்மலிங்கம் ஆகியோரடங்கிய குழுவினர் வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட சோதணைகளின்போது பொதிகளில் பொறிக்கப்பட்ட விலைகளைவிட அதிக விலையில் விற்றல், விலைகளை மாற்றியமைத்தல், காலாவதியாகும் திகதி மற்றும் கட்டளைத் திகதி இல்லாத பொருட்களை விற்றல், அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் விற்றல், உற்பத்தி நிறுவனத்தின் முகவரியற்ற வெளிநாட்டு சவர்காரங்களை விற்றல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபட்டிருந்த வர்த்தகர்கள் இனங்காணப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதேவேளை நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த  15 வர்த்தகர்களுக்கு புதன்கிழமை(29) ரூபாய் 33,500 தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் இவர்கள் கந்தளாய் நகர், முள்ளிப்பொத்தானை மற்றும் 94ஆம் 95ஆம் கட்டை பிரதேசங்களை சேர்ந்த வர்த்தகர்கள் எனவும் நுகர்வோர் அதிகாரசபையின் மாவட்ட உதவிப்பணிப்பாளார் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .