2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

பசியால் வாடிய குடும்பத்துக்கு அரிசி விநியோகம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி சம்பூர் அகதி முகாமில் பசியால் வாடிய,  தாமோதரம் குடும்பத்துக்கு, நோர்வே வாழ் தமிழ் பெண்மணியின் அனுசரணையில் ஒரு வருடத்துக்கு தேவையான அரிசிப் பொதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனால்,  சனிக்கிழமை (11) வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கிளிவெட்டியுள்ள சம்பூர் அகதி முகாமுக்குச் சென்று  அரிசிப் பொதிகளை வழங்கி வைத்தார்.

முன்னதாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முதியவர் தாமோதரத்தை, சனிக்கிழமை சென்று பார்வையிட்டு நலன் விசாரித்ததுடன், அவரின் செலவுக்காக ஒரு தொகைப் பணத்தையும் யோகேஸ்வரம் எம்.பி. வழங்கி வைத்தார்.

திருகோணமலை சம்பூர் மக்கள் 2006ஆம் ஆண்டு யுத்த சூழலால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வந்தனர்.

பின்னர் 2007ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி, பட்டித்திடல், கட்டைபறிச்சான், மணற்சேனை ஆகியவற்றில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் 848 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இம்மக்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவு கொடுப்பனவு 2012ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதால், தாங்கள் அன்றாட உணவுக்கும் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பதாக அகதி முகாம்களிலுள்ளோர் விசனம் தெரிவிக்கின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .