2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு நடை பவனி

Thipaan   / 2014 நவம்பர் 01 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


தேசிய வாசிப்பு மாத்தின் இறுதி நாளான  நேற்று வெள்ளிக்கிழமை (31) திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்களால் விழிப்புணர்வு நடை பவனி நடத்தப்பட்டது.

வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தும் முகமாக இந் நடைபவனி நடத்தப்பட்டது.

நேற்று காலை 10 மணிக்கு கல்லூரியில் இருந்து அதிபர் சி.ஆனந்தசிவம் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட நடைபவனி; மத்தய வீதி,  தேன்தமிழ் வீதி .கீழ்கரை வீதி உட்துறைமுக வீதிவழியாக  சென்று கல்லூரியை அடைந்தது.

பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கு கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .