Thipaan / 2015 ஜனவரி 24 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.அப்துல் பரீத்
திருகோணமலை மாவட்டத்தில் மீள்குடியேற்றச் செயற்பாடுகளை துரிதப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சருக்கு, நேற்று வெள்ளிக்கிழமை(23) அனுப்பியுள்ள அக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ள தங்களுக்கு எமது திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பாக நல்வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது அளப்பரிய சேவை இந்நாட்டு வரலாற்றில் பதியப்பட வேண்டும் அதன் மூலம் எதிர்கால சந்ததிகள் தங்களைப் பற்றிப் பேசக்கூடிய வாய்ப்பு உருவாக வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதிலும், மீள்குடியேறிய மக்களுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனைவிட மீள்குடியேற்றப்படாத பெரும் எண்ணிக்கையான மக்கள் இம்மாவட்டத்தில் இன்னும் இருக்கின்றனர். இவர்கள் நலன்புரி நிலையங்களிலும் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளிலும் பெருங் கஷ;டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வகையில் பின்வரும் கிராம மக்களை இன்னும் மீள்குடியேற்ற வேண்டியுள்ளது.
மூதூர் பிரதேச செயலகத்தின் சேனையூர், நாவலடி, சம்பூர், கூனித்தீவு, நவரட்ணபுரம், இக்பால்நகர் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் உப்பாறு, மஜீத்நகர் திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் கன்னியா, கரிமலையூற்று குச்சவெளி பிரதேச செயலகத்தின் சில கிராமங்கள் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் அரசின் பாரிய அபிவிருத்தித் திட்டத்துக்கு பெறப்பட்ட காணியைத் தவிர ஏனைய இடங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியும்.
இது போல ஏனைய கிராமங்களிலும் மீள்குடியற்றம் செய்வதில் தடைகள் எவையும் இல்லை.
நிரந்தர வீட்டு நிர்மாணம், மீள்குடியேற்றக் கொடுப்பனவு, குடிநீர் வசதிகள், வாழ்வாதார உதவிகள், மலசலகூட வசதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற வசதிகளும் மீள்குடியேறிய மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, இந்த விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் இவ்வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago