Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிண்ணியா முனைச்சேனை முஜாஹிதா வித்தியாலயத்துக்கு நீண்டகால தேவையாக இருந்த கட்டட பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக முதலமைச்சர் நஸீர் அஹமட் புதன்கிழமை (11) உறுதியளித்துள்ளார்.
கடந்த 50 வருடங்களுக்கு மேல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால், அவர்கள் போதுமானளவு வகுப்பறை வசதிகள் இன்றி மிகவுவும் சிரமப்படுகின்றனர்;.
இந்தப் பாடசாலையில் நிரந்தர கட்டடம் அமைக்கவேண்டுமென்ற வேண்டுகோளை உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டிடம் விடுத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு நிரந்தர கட்டிடமொன்றை அமைத்துத்தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் மர நிழலிலும் கொட்டில்களிலுமே இடம்பெற்று வருகின்றன. அதேவேளை மழை, வெய்யில் என்பன ஆசிரியர்கள், மாணவர்களின் தலையிலே கடந்த பல வருடங்களாக விழுந்தன. இவ்விடயங்களை பல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு வந்தும் அது பயனளிக்கவில்லை.
ஆயினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் பாடசாலைக்கான கட்டிடத் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்து தருவதாக இன்று புதன்கிழமை வாக்குறுதியளித்துள்ளார்.
3 minute ago
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
2 hours ago