Kanagaraj / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த கால யுத்தத்தின் போது காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இம் மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான தெளிவூட்டல் கூட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜெலதீபன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலாளர், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவு சகல கிராம உத்தயோகத்தர்கள் பொது மக்கள் வாக்கு மூலங்களை எவ்வாறு பெறுதல் மற்றும் அவர்களை எவ்வாறு சமூகமளிக்கச் செய்தல் போன்றன பற்றி விளக்கமளித்தார்.
பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறள்ள இவ் விசாரணை தினங்களில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள மார்ச் மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago