Sudharshini / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
இலங்கை போக்குவரத்து சபை, திருகோணமலை சாலை ஊழியர்கள் புதிய சாலை அத்தியட்சகர் நியமனத்தை கண்டித்து பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொண்டனர்.
சில மாதங்களுக்கு முன்னர் கந்தளாய் சாலையில் சாரதியாக பணியாற்றிய பண்டார என்பவர், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு இணங்க கெக்கிராவ சாலைக்கு இடம்மாற்றப்பட்டு அங்கிருந்து திருகோணமலை சாலைக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் புதிய அரசின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக அவர் வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை சாலைக்கு, சாலை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடகைளை சனிக்கிழமை (21) திருகோணமலை சாலையில் பெறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் திருகோணமலை சாலையின் போக்குவரத்து சேவைகள் மந்தநிலையில் இடம்பெற்ற போதும் வெளியிடங்களிலிருந்து வந்த பஸ்கள் வழமைபோன்று தமது சேவைகளை தொடர்ந்தன. சில இடங்களுக்கான சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டன.

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago