2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வட்டமடு வயல் பிரதேசத்தில் துப்பாக்கிகள் மீட்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வட்டமடு வயல் பிரதேசத்தில் கல்மலைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு சொட்கன்களை சனிக்கிழமை (21) மாலை மீட்டுள்ளதாக காஞ்சரம்குடா இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் இராணுவத்தினர் வழமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, கல்மலைப் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு சொட்கன்களை மீட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிகள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் மீட்கப்பட்ட துப்பாக்கிகளை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைத்துள்ளதாகவும் இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X