Kanagaraj / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மன் நகர் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பூர் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சிசிர ஜெயந்த தலைமயிலான பொலிஸ் குழுவினரே இவ் ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் ஆயுதங்கள் தனியார் காணியொன்றிலுள்ள நிலக்கடலை தோட்டத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்களில் மிதிவெடி-19, ரீ 56 ரக மெகஸின்-13, எஸ்.ஜீ.ரவுண்டஸ்-07, கிரனைட்-02, கிளைமோர்-01, டெட் நைட்டர்-02, ஆட்லரி சாச்சர் கூர்-2, டொம்பா ரவுண்ஸ்-05, கிளைமோர் ரிமோட்-01, மோட்டார்கன் பியுஸ்-04, ரீ 56 துப்பாக்கி ரவைகள் 1069 போன்றன மீட்டகப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தார்.
அத்துடன் புலிக்கொடி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
17 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
2 hours ago