2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு 27 பேரூந்துகள் கையளிப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு கிழக்கு மாகாண, இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களுக்கு 27  பேரூந்துகளை கையளிக்கும் வைபவம், கிண்ணியா எழலரங்கு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, உள் நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X