Gavitha / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையும் சாட்சியளிப்பும் சனிக்கிழமை (28) குச்சவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இரண்டு தினங்களாக நடைபெற்ற இவ்விசாரணை எதிர்வரும் 3ஆம், 4ஆம் திகதிகளில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம் இங்கு சாட்சியமளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருகோணமலை சிவில் சமூக அமைப்பும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கண்டன போராட்டம் ஒன்றையும் பிரதேச செயலகத்தின் முன் நடத்தினார்கள்.
இப்போராட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனும் கலந்து கொண்டார்.

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago