Kogilavani / 2015 மார்ச் 12 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் ஒருவாரத்துக்குள் தகுந்த பதிலை வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை (11) கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்கல் பல வருடங்களாக எவ்வித வேதனங்களுமின்றி தொண்டு அடிப்படையில் சேவையாற்றி வந்த 300க்கும் மேற்பட்டோருக்கு இன்னமும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வில்லை.
கடந்த 10,15 வருடங்களுக்கு மேலாக அவர்கள் நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்திருக்கின்றனர்.
கடந்த மாதம் 11ஆம் திகதி பகல் திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தினார்கள்.
இதன்போது ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்திருந்தனர்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தங்களையும் கவனத்தில் எடுத்து நிரந்தர நியமனம் பெற்றுத்தருவதற்கு
வழிவகுக்க வேண்டும் என ஆளுநரிடம் இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தகுந்த தீர்வுகள் வழங்கப்படாத நிலையிலே முதலமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் தொண்டார் ஆசிரியர் நியமனம் தொடர்பில் ஒருவாரத்துக்குள் தகுந்த பதிலை வழங்குவதாக உறுதியளித்தார்.
விரைவில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாவிட்டால் தாம் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு உந்தப்படுவோம் என தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago