2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் நலன் கருதி ஆரம்ப பிரிவு வளாகத்தில் விளையாட்டு முற்றம் புதன்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.

இவ்வளாகத்தை திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இதேவேளை, இவ் வளாகத்தில் ஆரம்ப பிரிவு நூலகம், இலங்கை இந்து இளைஞர் பேரவைச் செயலாளரும் திருகோணமலை பொது நூலகத்தின் முந்நாள் நூலகருமான செ.சிவபாதசுந்தரத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகள், கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் நடைபெற்றன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X