Thipaan / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, கிண்ணியா விஷன் தொண்டர் அமைப்பு கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வடமாகாணத்தில் இயங்கும் ஆறுதல் நிறுவனத்தால் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் பகுதிகளைச் சேர்ந்த 60 முன்பள்ளி ஆசியர்கள் இப்பயிற்சியினை பூர்த்தி செய்துள்ளனர்.
இவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு கிண்ணியா விசன் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டு முன்பள்ளி. தகவல்தொழிநுட்பம், இளைஞர்விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்து கொண்டு முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முந்நாள் வடக்கு, கிழக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டு அமைச்சின் செயலளர் சந்தரம் டிவகலாலா, கிண்ணியா விசன் நிறுவனத்தின் தேசிய அமைப்பாளர் மு.சைபுள்ளா, கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் பொன். செல்நாயகம் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.


32 minute ago
40 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
1 hours ago
6 hours ago