Gavitha / 2015 மே 25 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (24) திருகோணமலை எஹட் கரிதாஸ் நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் யாப்பு விதிகளுக்கு அமைவாக தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மதங்களில் ஒரு வருடத்துக்கு ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்படுவர். இந்த வகையில் இந்த வருடம் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த தலைவர் தெரிவில் நால்வர் போட்டியிட நேர்ந்தமையினால், வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த வகையில் போட்டியிட்ட ஏனைய மூவரிலும் அதிக படியான வாக்குகளைப் பெற்ற அப்துல் சலாம் யாஸீம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக கீதபொன்கலன், உப தலைவராக எஸ்.நவம். உப செயலாளராக ஏ.ஜே.சாலி, பொருளாளராக சமன் மல்லவராச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதேவேளை நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கியாஸ் ஷாபி, ஜே.எம்.இஸ்மத், வடமலை ராஜ்குமார், ஏ.ரபாய்தீன் பாபு, ஜி.நிக்கி ஜோன்சன், எஸ்.லோஜினி, ஏ.ஜே.சாலி ஆகியோர் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர்.

49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago