Gavitha / 2015 மே 25 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
யாழ். புங்குடுதீவு மாணவி படுகொலையைக் கண்டித்து அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட திருக்கோவில் எம்.எம்.டி மகாவித்தியாலய மாணவர்கள் மௌன எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை (25) பாடசாலைக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.
இக்கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், இப்பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்றனர். வித்தியாவின் படுகொலையில் நீதி தேவதை கண் திறக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, மாணவர்களின் பாதுகாப்பபை உறுதிப்படுத்து, வித்தியாவுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்.
போன்ற வாசகங்களை ஏந்தியவாறு உணர்பூர்வமாக படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு நீதி வழங்க கோரி மாணவர்கள் மௌனமாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago