Suganthini Ratnam / 2015 மே 26 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்துக்கு கிழக்கு மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று திங்கட்கிழமை (25) நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
காணி, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியும் சம்பூருக்கு விஜயம் செய்திருந்தார்.
மீள்குடியேற்றத்துக்கு முன்னரும் மீள்குடியேற்றத்தின் பின்னரும் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக இவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தனர்.
மீள்குடியேற்றத்துக்காக காணிகளை துப்பரவு செய்துகொண்டிருந்த மக்களை மாகாணசபை அதிகாரிகள் குழு சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துள்ளதாக இந்த சந்திப்பில் கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.

55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago