Thipaan / 2015 மே 27 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 30 பாடசாலைகளுக்கு சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் கே. வினோபவன் தெரிவித்தார்.
'பாடசாலை தளபாடங்களும் பிள்ளை நேய மாதிரி வகுப்பு உபகரணங்களும்' எனும் திட்டத்தின் கீழ் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளுக்கு 2,049 மாணவர் மேசை கதிரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (26) மாலை இடம்பெற்ற நிகழ்விலேயே இவை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் இந்நிகழ்வில், கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 பாடசாலைகளைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் வைப்பிலிடப்பட்ட வங்கி சேமிப்பு புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி. கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் கே. வினோபவன் உட்பட பாடசாலை அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago