Princiya Dixci / 2015 மே 27 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் கடமையாற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று புதன்கிழமை (27) ஈடுபட்டனர்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக உதவிக் கல்விப் பணிப்பாளர்களாக சேவையாற்றி வரும் தமக்கு
நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக கடந்த வருடம் மத்திய கல்வி அமைச்சினால் நேர்முக பரீட்சை நடத்தப்பட்டிருந்தும் இதுவரை நிரந்தர பணிப்பாளர்கள் பதவிக்கான கடிதங்கள் வழங்கப்படவில்லையென இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் காலை 9.30 மணிக்கு கூடிய இவர்கள், தமக்கான தீர்மானங்களை எடுத்த பிற்பாடு அங்கிருந்து சுலோகங்களைத் தாங்கிய பதாதைகளுடன் உவர்மலை மத்திய வீதி, உட்துறைமுகவீதி மற்றும் கீழ்கரை வீதி வழியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை வந்டைந்தனர். இங்கு அலுவலக முன்றிலில் சுலோகங்களை தாங்கிப் பிடித்தவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
பின்னர், தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்க முயன்றனர். எனினும், ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ அலுவலகத்தில் இல்லாமையினால் ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் டபிள்யு. அஞ்சனவிடம் கையளித்தனர்.



55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago