Suganthini Ratnam / 2015 மே 29 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்,எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வீடுகளை இரவு வேளைகளில் உடைத்து பொருட்களை கொள்ளையிட்டுவந்த சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட மூவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆஐர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் மீது ஏற்கெனவே உப்புவெலி பொலிஸ், திருகோணமலை துறைமுகப் பொலிஸ், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையங்களில் சுமார் 13 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கணினி, மடிக்கணினி, தொலைக்காட்சி, கையடக்க தொலைபேசி, கைக்கடிகாரம், சிகையலங்கார உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago