George / 2015 மே 29 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கணவனையும் தனது மூன்று மகன்களுள் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு பரிதவிக்கும் லலிதா எனும் பெண்ணின் வாழ்க்கை சோகமயமானது.
திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரத்தில் சாதாரண வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார் லலிதா என்பவர்.
கணவனும் மகன்மார்களும் இல்லாத ஏக்கத்தில் தன்னுடைய வாயிற்றுப்பிழைப்புக்காக இடியப்பம், இட்லி அவித்து விற்பதும், கூலி வேலை செய்வதையும் அன்றாடத் தொழிலாகக் கொண்டு தனது 51ஆவது வயதிலும், பிறருடைய உதவியை எதிர்பாராமல் நாட்களை கழிக்கின்றார்.
2008.02.04 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் லிலிதாவின் வீட்டு வாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து இறங்கிவந்த 17 பேர், விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த லலிதாவின் இரண்டு மகன்களையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணை முடிந்து விட்டு விடுவார்கள் என்று காத்திருந்த லலிதாவுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. அழைத்துசெல்லப்பட்ட மகன்கள் இதுவரை திரும்பி வரவே இல்லை.
மூன்று மகன்களுள் மூத்தவர் மட்டும் உயிருடன் இருக்கிறார். வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஏனைய இரு மகன்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
கடத்தப்பட்ட, இரண்டாம் மகன் ராம கிருஷ்ணன் -பிரதாபன், கடத்தப்பட்ட போது வயது 24 இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவருடைய மனைவி தற்பொழுது அவருடைய அம்மாவின் வீட்டில் மட்டக்களப்பில் இருக்கிறார்.
மூன்றாவது மகன் ராம கிருஷ்ணன்-ஜெயரூபன், கடத்தப்பட்ட போது வயது 21 இவ்விருவரையும் மீட்டுக் கொள்வதற்காக லலிதா, மனித உரிமைகள் ஆணைக்குழு, பூஸா முகாம், வெலிக்கடை சிறைச்சாலை, ஜனாதிபதி ஆணைக்குழு, பொலிஸ் நிலையம் என ஏறி இறங்கி அழுத கண்களுடனும் கண்ணிருடனும் பரிதவிக்கின்றார்.
தனது கணவன் 1986ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வந்து கொண்டிருந்த வேளையில், கன்னியா என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டார். அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்கிறார் லலிதா.
இவ்வாறு ஏக்கத்துடனும் மகன்கள் திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தனது எஞ்சியுள்ள வாழ்நாளைக் லலிதா, கழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago