Thipaan / 2015 மே 30 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 128 வெடிக்குச்சுகளை வியாழக்கிழமை (28) மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சாஜன்ட் ப..எஸ்.செனவிரட்ன தலைமையில் சென்ற பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவினரே இவற்றினை மீட்டுள்ளனர்.
அனுமதியற்ற நிலையில் இவை கொண்டுவரப்பட்டு வில்கம் விகாரை பகுதியில் உள்ள கல்குவாரிக்கு அருகில் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் இதன்போது 128 வெடிக்குச்சுகள் மீட்கப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago