2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் 3895 வழக்குகள் பதிவு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா பிரதேசத்தில் கடந்த எட்டு மாத காலப்பகுதிக்குள்  போக்குவரத்து சட்ட விதிமுறைகளை  மீறிய  குற்றத்திற்காக 3,895 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கிண்ணியா பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'விதிமுறைகளை  பின்பற்றாமை குற்றத்திற்காக 4 வழக்குகளும் மது பாவனையில் வாகனங்களை  செலுத்திய குற்றத்திற்காக 5 வழக்குகளும் பொலிஸாரின் கட்டளைகளை மீறிய குற்றத்திற்காக 38 வழக்குகளும் வாகன அனுமதிப்பத்திரமின்றி வாகனங்களை  செலுத்திய குற்றத்திற்காக 45 வழக்குகளும் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் செலுத்திய  குற்றத்திற்காக 894 வழக்குகளும் வேறு குற்றங்களுக்காக 2909 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .