2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சம்மேளனத்தை சேர்ந்;த சுமார் 250 அங்கத்தவர்கள் மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து  சுழற்சி முறையிலான  உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமையிலிருந்து  (03) மேற்கொள்கின்றனர். இதில்  சாதகமான பதில்  கிடைக்காத பட்சத்தில், சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுமென்று அச்சம்மேளனத்தின் தலைவர் இரா.ஜெயமோகன் தெரிவித்தார்.

திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டப வளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,  'கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக நஸீர் அஹமட் பதவியேற்ற பின்னர், கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக இரண்டு தடவைகள் நாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தோம்.  முதலமைச்சருடன்  நான்கு தடவைகள்; பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தோம்' என்றார்.

'இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இரண்டு வாரங்களில் தீர்வு பெற்றுத்தருவதாக கூறினார். அதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .