Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
திருகோணமலை மாவட்டத்திற்கு 2019 ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 3161.36 மில்லியன் ரூபாய் நிதியில் 5224 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 726.74 மில்லியன் பெறுமதியான 1399 வேலைத் திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் , வரவு செலவுத்திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 56.77 மில்லியனில் 357 வேலைத்திட்டங் களும் நிறைவு பெற்றுள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
கம்பெரலிய துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1242.35 மில்லியன் ரூபா நிதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 2149 வேலைத்திட்டங்களில் 301 நிறைவடைந்துள்ளதுடன், ஏனையவை நடைபெற்றுவருவதாகவும் அவர்
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டம், விளையாட்டு அபிவிருத்தி, கிராம சக்தி நிகழ்ச்சித்திட்டம், மீள்குடியேற்ற வேலைத்திட்டம், சிரிசர பிவிசும உள்ளிட்ட வேலைத்திட்டங்களும் திருகோணமலை மவாட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கிழக்கு மாகாண சபையின் ஊடாக 639.87 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 401 அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், உள்ளுராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு, சுகாதார மற்றும் சுகாதார சேவைகள் அமைச்சு, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீதி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு, கிராமங்களின் விசேட தேவைகள் சிறப்புச் செயற்திட்டம் ஆகியவற்றின் ஊடாக இவை முன்னெடுக்கப்படுகின்றன.
மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் இவ்வருடத்தில் நிறைவுக்கு வரும் வகையில் முன்னெடுப்புக்கள் அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago