2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

5 மாணவர்கள் படுகொலை வழக்கு; சந்தேகநபர்களுக்கு பிணை

Super User   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 12 அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களின் பிணை மனு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அமில ரணராஜா முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 12 சந்தேகநபர்களையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் மேல் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தார்.

அத்துடன் வழக்கு விசாரணைகள் முடியும் வரை குறித்த சந்தேகநபர்கனை கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் பிரதி  ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவருமே 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .